[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

’அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்

prashanth-in-andhadhun-tamil-remake

சமீபத்தில் 3 தேசிய விருதுகளைப் பெற்ற ’அந்தாதுன்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில், பிரஷாந்த் நடிக்கிறார்.

அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘அந்தாதுன்’. பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். சமீபத்தில், சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளை அந்தாதுன் பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் பின்னர் தனுஷ் நடிக்கி றார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்கிறார். இதன் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தியாகராஜன் கூறும்போது, '’இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற சில நிறுவனங்களும் சில ஹீரோக்களும் போட்டிப் போட்டார்கள். படம் ரிலீஸ் ஆன போதிருந்தே அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் ரீமேக் உரிமையை கேட்டு வந்ததால் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் ’ஜானி கட்டார்’ திரைப்படத்தை ’ஜானி’ என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்தேன்.


’அந்தாதுன்’ படத்தின் கதை பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த், லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், சிறந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பாக பொருந்தும். ரீமேக்குக்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குனர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப் படும்’’ என்றார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close