[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan-s-next-with-pandiraj-titled-namma-veettu-pillai

பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ’நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

’மெரினா’ படம் மூலம் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். தொடர்ந்து அவர் இயக்கத்தில், ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தார். இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ’நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதில், சிவகார்த்திகேயனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்டி, அனு இம்மானுவேல், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசை அமைத்துள்ளார். 

முதலில், இந்தப்படத்துக்கு எம்.ஜி.ஆரின் ’எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் வைக்கப்பட்டி ருப்பதாகக் கூறப்பட்டது. அந்த டைட்டிலை தர, விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மறுத்து விட்டதால், ’நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பரில் வெளியாகிறது. இதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close