[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் - தயாரிப்பாளர்

simbu-expelled-from-maanadu-movie

‘மாநாடு’ திரைப்படத்திலிருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிம்புவும் உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்‌சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மாதம் மலேசியாவில் தொடங்க இருந்த படப்பிடிப்பு, சில காரணங்களால் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்‌ சிம்பு நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வேறோரு நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் உருவாக்கப்படுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close