[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்”- சேரனுக்கு வசந்தபாலன் வேண்டுகோள்

director-vasantha-balan-request-to-actor-saravanan

பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறும்படி சேரனை இயக்குநர் வசந்தபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியில் இயக்குநர் சேரன், நடிகர் சரவணன் உள்ளிட்ட 16 பேர் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர். வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் இப்போட்டியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சமிருக்காது. சமீபத்தில் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார். இதற்கு வெளியில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து தனது சர்சசை கருத்துக்கு சரவணன் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின்போது இயக்குநர் சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சேரனை பார்த்து சரவணன் ‘போயா வாயா” என்றதோடு மரியாதை குறைவான வார்த்தையும் பயன்படுத்தினார். இதனால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சேரன் கண்கலங்கும் நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் சேரன் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறும்படி சேரனை இயக்குநர் வசந்தபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

“அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.
காற்றின் ரகசியப் பக்கங்களில் 
இந்த செய்தி ஊடேறி 
உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.
வித்யாகர்வத்துடன் 
நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.
பருந்து பறக்கும் 
வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப் 
என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு 
அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் 
உங்களையும் 
உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.
இயக்குநர் மகேந்திரன்,
இயக்குநர் பாலுகேந்திராவுடன் 
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு 
உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.
அறியாமை என்ன செய்ய......
உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் 
கௌரவக்குறைவு ஏற்பட்ட போது 
உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.
ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் 
அவனின் மேன்மையை 
எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close