[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

தனுஷ் படத்துக்கு என்னிடம் பேசவில்லை: ஹிர்த்திக் ரோஷன்

i-ve-not-been-contacted-by-dhanush-movie-hrithik-roshan

தனுஷூடன் நடிக்கும் படத்துக்கு தன்னிடம் யாரும் பேசவில்லை என்று பிரபல இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்ஜனா (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவர் ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். கவனிக்கப்பட்ட இந்தப் படம், தனுஷூக்கு இந்தியிலும் பெயர் வாங்கித் தந்தது. இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் ’ஷமிதாப்’ என்ற இந்திப் படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இந்தியில் நடிக்கவில்லை. தமிழிலேயே கவனம் செலுத்தி வந்தார்.  இந்நிலையில், அவர் மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கிறார்.

 இதை ’ராஞ்ஜனா’ ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதில் தனுஷூடன் ஹிர்த்திக் ரோஷன் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார் என்றும் ஹீரோயினாக சாரா அலிகான் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். ’’ஆனந்த் எல்.ராய், சிறந்த இயக்குனர். இதுவரை அவர் படத்தில் நடிப்பது பற்றி யாரும் பேசவில்லை. பேசினால் அவர் படத்தில் நடிப்பது பற்றி யோசிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close