[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்!

actor-sudeep-injured-during-a-film-shoot

கன்னட பட ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் நடிகர் சுதீப், முதுகில் படுகாயமடைந்தார்.

தமிழில், ’நான் ஈ’, ’ரத்த சரித்திரம்’, ’புலி’, ’முடிஞ்ச இவனப்புடி’ படங்களில் நடித்தவர் கன்னட ஹீரோ சுதீப். இவர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ’தபாங் 3’ என்ற இந்திப் படத்தில் நடித்துவந்தார். இதில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இதையடுத்து ’கோட்டிகோபா 3’ என்ற கன்னட படத்தில் நடித்துவருகிறார். 

இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் சுதீப்பின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close