[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

‘கேஜிஎஃப்’ சஞ்சய் தத்தின் ‘ஆதிரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

first-update-from-kgf-chapter-2

கேஜிஎஃப் திரைப்படத்தின் ஆதிரா கேரக்டரில் நடிக்கும் சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்தார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. 

பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன் அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப்.

வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட கேஜிஎஃப்பின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வரும் ஆதிரா கேரக்டரில் நடிக்கும் சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. முகத்தை பாதி மூடிக்கொண்டு மிரட்டலான பார்வை பார்க்கும் ஆதிராவின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேஜிஎஃப் ரசிகர்கள் பலரும் ஆதிராவின் ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close