[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டிசம்பர் 20-ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ஹீரோ!

sivakarthikeyan-s-hero-to-release-on-december-20

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பர் 20 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மித்ரன். சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமானார்.

ஹீரோ எனப் பெயரிடப்பட்ட இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆகிறார்

கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட ஹீரோ திரைப்படம் வரும் டிசம்பர் 20 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close