[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

நடிகரிடம் 2 பழத்துக்கு ரூ. 442 கேட்ட ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!

charging-rahul-bose-rs-442-for-2-bananas-may-cost-jw-mariott-fine-of-rs-25-000

இந்தி நடிகர் ராகுல் போஸிடம் 2 வாழைப் பழத்துக்கு ரூ. 442.50 வசூலித்த நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர், தமிழில், கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தி பட ஷூட்டிங்கிற்காக சண்டிகர் சென்றிருந்த அவர், ஐந்து நட்சத்திர ஓட்டலான மாரியாட்டில் தங்கினார். அங்கிருந்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதில், இரண்டு வாழைப்பழம் கேட்டேன். பழத்துடன் வந்திருக்கும் பில்லை பாருங்கள். இந்த இரண்டு பழங்களின் விலை, ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50. இதற்கு தகுதியானவன் தானா என்பது தெரியவில்லை’’ என்று கிண்டலாகத் தெரிவித்தி ருந்தார்.

இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.  இந்நிலையில் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் இதுபற்றிய சாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 பழங்களுக்கு வரி விதிப்பதில்லை என்றும் அந்த ஓட்டல் நிர்வாகம் எப்படி அதற்கு வரி விதித்தது என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியான பதிலை அளிக்கவில்லை என்றால், அந்த ஓட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த சர்ச்சையை பயன்படுத்திக் கொண்ட மும்பை தாஜ் ஓட்டல், தங்கள் ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாகத் தரப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close