[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

சமந்தா கலந்து கொண்ட விழாவில் போலீஸ் தடியடி: காரை பஞ்சராக்கிய ரசிகர்கள்

police-lathicharged-in-actress-samantha-function

மதுரையில் நடிகை சமந்தா கலந்துகொண்ட தனியார் நிறுவனத் திறப்பு விழாவில் போலீசார் தடியடி நடத்தினர்.

நடிகை சமந்தா, மதுரையில் தனியார் நிறுவன கிளை திறப்பு விழாவுக்கு வந்தார். சமந்தா வருவதை அறிந்த பொதுமக்களும், ரசிகர்களும் அதிக அளவில் குவியத் தொடங்கினர். மேலும், அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசாரின் பாதுகாப்பை மீறி ரசிகர்கள் மேடையை நோக்கி நகர்ந்தனர். இதனால், விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை மற்றும் ஒலி பெருக்கிகள் போன்றவை சரிந்தன. மேலும், சமந்தா வந்த காரை யாரோ ஒரு ரசிகர் பஞ்சராக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரசிகர்கள் கூட்டத்தில் சமந்தா சிக்கிவிடாமல் காப்பாற்றிய பாதுகாவலர்கள், அவரை மாற்று காரில் அனுப்பி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close