[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 ?

vijaysethupathi-to-play-legendary-sri-lankan-spinner-muttiah-muralitharan

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘லாபம்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை டிஏஆர் மோஷன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக எனத் தெரிகிறது. அதாவது முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனை குறிப்பிடும் விதமாகவே படத்திற்கு ‘800’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் 2020-ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதுமே விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். முத்தையா முரளிதரன் ரோலுக்கு விஜய் சேதுபதி கச்சிதமாக பொறுந்துவார் எனவும் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close