[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

சமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து

lyricist-vairamuthu-stands-with-surya

தனக்கு ஒரு சமூக பொறுப்பும், அக்கறையும் உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து கூறுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார். சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பாடலாசியர் வைரமுத்துவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ''சினிமா துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காமல் தனக்கு ஒரு சமூக பொறுப்பு அக்கறை உண்டு என்று செயல்பட்ட  சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்.

இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல. தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர்'' என்று தெரிவித்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close