[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

director-association-election-begins-at-chennai

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தலைவர் பொறுப்பில் இருந்த விக்ரமன் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய‌ தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித்யாசாகர் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

ஏற்கெனவே சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால் ஆர்.வி.உதயகுமார் தேர்வானார். இதேபோல, பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு போட்டியின்றி‌ தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close