[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

''நீ எதிரியா? உதிரியா?'': மாஸ் காட்டும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல்

here-is-the-3rd-single-from-ner-konda-paarvai

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெற்றுள்ள 'தீ முகம் தான்' பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது.

இந்தி படமான, ‘பிங்க்’  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்

இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்

இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள தீ முகம் தான் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது. பா.விஜய் எழுதியுள்ள இந்தப்பாடலின் வரிகள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close