[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு!

up-government-makes-movie-super-30-tax-free-in-the-state

ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர், ஆனந்த் குமார் (37). கணித ஆசிரியரான இவர், 2002 ஆம் ஆண்டு முதல் ’சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பீகாரில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் 30 பேரைத் வருடம் தோறும் தேர்ந்தெடுத்து அவர்களை ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு கடுமையான பயிற்சி அளித்து வெற்றி பெற வைக்கிறார். அதோடு ஒரு வருடத்துக்கான அவர்களின் செலவையும் அவரே ஏற்றுகொள்கிறார். இதனால் ஏராளமான ஏழை மாணவர்கள் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.

பீகாரில் பிரபலமான இவரது வாழ்க்கைக் கதையை, ’சூப்பர் 30’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கியுள்ளனர். ஹிர்த்திக் ரோஷன், ஆனந்த் குமாராக நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர், விரேந்திர சக்சேனா, நதிஷ் சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ’குயின்’ இயக்குனர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இந்தப்படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற் றுள்ளது. 

இந்நிலையில், சமூகத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்வதாலும் பீகாரை சேர்ந்த கணித ஆசிரியரை பற்றிய படம் என்ப தாலும், இந்தப் படத்துக்கு அம்மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வரிவிலக்கு அளித்தது. இந்நிலையில் உத்தரபிர தேச அரசும் இப்போது வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close