[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்

director-bharathiraja-plan-to-celebrate-rajinikanth-and-kamal-hassan

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல், ரஜினியும் 16 வயதினிலே, கொடி பறக்குது என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இருவரது திரை உலக சாதனைகளையும் பாராட்டி விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்து, இருவரிடத்திலும் அவர் பேசி, ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும், இந்த விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close