[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ’பொன்மகள் வந்தாள்’

jyothika-s-next-titled-pon-magal-vanthal

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்துக்கு ’பொன்மகள் வந்தாள்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம், ’பொன்மகள் வந்தாள்’. ஜோதிகா, கதையின் நாயகியாக நடிக்கிறார். கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் இந்தப் படத்தின் பூஜை இன்று நடந் தது. இதில், நடிகர் சிவக்குமார், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் ஹரி, பிரம்மா, முத்தையா, 2டி என்டெர்டெயின்மென் ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close