[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

தனுஷ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 ஆம் தேதி ஆரம்பம்  

here-s-when-dhanush-will-begin-the-second-schedule-of-durai-senthilkumar-s-film

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர் தனுஷ். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் இவருக்கான பகுதிகள் முழுக்க படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஒன்று கடந்த மாதம் இறுதி பகுதியில் குற்றாலத்தில் தொடங்கியது. 

இதனை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு தனுஷூடன் இணைந்து நடிகை சிநேகா நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு பட நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடாவும் நடித்து வருகிறார். அதே போல் தனுஷூக்கு வில்லனாக தெலுங்கு பட நடிகர் நவீன் சந்திரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். படத்தினை ‘கொடி’ இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘அசுரன்’ படத்திற்கான காட்சிகளை தனுஷ் முழுமையாக முடித்து கொண்டுத்துவிட்டதால் துரை செந்தில்குமாரின் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. வரும் 11 தேதி நடைபெற உள்ள படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள உள்ளார். 

ஆனால் எந்த ஊர்? எந்த இடம்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முறைப்படி அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிய வந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையில் முன்றாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து தனுஷ், மாரிசெல்வராஜூடன் ஒரு படமும் அதன்பின்  ‘ராட்ச்சசன்’ இயக்குநர் ராம்குமாருடன் ஒரு படமும் அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close