[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பிரபாஸின் ’சாஹோ’வில் ஜாக்குலின் பெர்ணான்டஸ்!

jacqueline-fernandez-to-have-a-cameo-in-prabhas-saaho

பிரபாஸின் சாஹோ படத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், ’சாஹோ’. இதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப் பதிவு செய்கிறார். சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.

படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறா த வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் அதற்கு சாட்சியாக அமைந் தது.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகள், இப்போது ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் இன்னொரு ஹீரோயினும் சேர்ந்திருக்கிறா ர். அவர் பிரபல இந்தி நடிகை, ஜாக்குலின் பெர்ணான்டஸ்! 

‘’உண்மைதான். ஜாக்குலின் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். அவர் பங்கேற்றப் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் ஆஸ்திரியாவில் நடந்தது. அவருக்கு சில வசனக் காட்சிகளும் படத்தில் உள்ளன’’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close