[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

பிக் பாஸ்’ மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீசார் சம்மன்

police-summoned-to-big-boss-meera-mithun

‘பிக் பாஸ்’ சீசன் மூன்றில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் சம்மன் கொடுத்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்திருக்கிறது. எனவே, ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ஆம் தேதி, ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு காவல்துறையினர் சம்மன் அளித்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ளதால் வெளியே வரமுடியாது என்றும் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆஜராவதாகவும் மீரா மிதுன் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க நடிகை வனிதா விஜயகுமாரை விசாரிக்க, சென்னையில் பிக்பாஸ் வீட்டுக்குள் தமிழக மற்றும் தெலங்கானா காவல்துறையினர் நுழைந்துள்ளனர். தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தெலங்கானா காவல்துறையில் வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வனிதா விஜயகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close