[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

“அனிருத், யுவன், மைக்கேல் ஜாக்சனை பிடிக்கும்” - ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் 

my-dad-has-been-very-supportive-of-me-ar-ameen

‘சகோ’ ஆல்பம் மூலம் தனது முதல் முத்திரையை பதித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன். அப்பாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய பல அனுபவங்களை முதன்முறையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். 11 வகுப்பு படிக்கும் இவர் இந்த இளம் வயதிலேயே தன் இசை வாழ்வுக்கு ஒரு களத்தை அமைத்துள்ளார்.  அவர் அளித்த மிக விரிவான பேட்டியில் தன் இசை உலக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்.


அவரிடம் முதல் கேள்வியாக இசை குடும்பத்தில் இருந்து வந்ததால் இயற்கையாகவே இசை மீதான ஆர்வம் உங்களுக்கு வந்துவிட்டதா எனக் கேட்டனர். இந்தக் கேள்விக்கு அவர் மிகத் தெளிவான பதிலை அளித்திருக்கிறார். “நான் அப்படி சொல்ல மாட்டேன். தானாகவே இசையின் மீதான தேர்வு நடக்கவில்லை. ஆனால் அது ஒரு சீரான வளர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டேன். 

நான் இசையை முறையாக பயின்றேன். நான் இப்போது யோசிக்கும் போது இசை என் வாழ்க்கையில் பின்னாளில்தான் நுழைந்தது தெரிகிறது. என் அப்பாவுடன் சேர்ந்து வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது எல்லாம் என்னையும் இசையோடு இணைத்தே ஒரு அடையாளம் உருவானது. அதன் பிறகுதான் நான் மெதுவாக இசையை கற்க ஆரம்பித்தேன். அப்பாவின் இசைப் பள்ளியான ‘கேஎம்’ ஒரு திறப்பாக அமைந்தது. அது தொடங்கப்பட்ட பிறகே எனக்கு முதன்முறையாக ஒரு களம் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய வெற்றி. அங்கே பல்வேறு விளையாட்டுக்கள் இடையில் இசையை கற்றேன். ஒரு கட்டத்திற்கு மேல் இசையை தீவிரமாக எடுத்து கொண்டேன். அதற்குப் பின்னால்தான் இசை என்னை மாற்றியது” என்று கூறியிருக்கிறார். 

இசை குறித்து உங்கள் அப்பாவுடன் விவாதிப்பீர்களா?

“ஆமாம். நான் செய்வேன். விவாதிக்கும் எந்தநேரமும் நான் புதிய விசயங்களைக் கடந்து வருவேன்.  அவரோடு பல விஷயங்களை பகிர்ந்து கொள்வேன். அவர் என்னுடன் புதுவிதமான இசையை பகிர்ந்து கொள்வார். நாங்கள் தயாரிப்பு சம்பந்தமான விஷயங்களை பற்றியும் புதுவகையாக இசையை வெளிப்படுத்துவது பற்றியும் பேசுவோம். அது என்னை அப்படியே மெருகேற்றிவிடும். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் நான் உருவானேன். அவரிடம் நான் திரைப்படங்களை பற்றியும் கேஜெட்ஸ், போட்டோகிராஃபி பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இருவரும் இசையை விரும்புகிறேம். அவர்தான் எனக்கு டெக்னிகல் விஷயங்களில் பக்கபலமாக இருக்கிறார். என் வாழ்நாளில் அப்பாவுடன் சேர்ந்து   குடும்பத்துடன் பாரீஸ் போனதை மறக்கவே முடியாது”

உங்களுக்கு நடிக்கும் ஆசை இருக்கிறதா?

“எனக்குத் தெரிவில்லை. இசைதான் என் மனம் முழுக்க நிறைந்திருக்கிறது”

எந்த மாதிரியான இசை உங்களுக்குப் பிடிக்கும்? உங்கள் அப்பாவை தவிர?

“நான் எல்லாவிதமான இசைகளையும் கேட்பேன். எட் ஷீரனை நான் அதிகம் விரும்புகிறேன். போஸ்ட் மலோனை பிடிக்கும். ஜெஸ்டின் பீபெர், யுவன் சங்கர் ராஜா, அனிருத், கன்யே வெஸ்ட் எனப் பலரை பிடிக்கும். அப்புறம் மைக்கேல் ஜாக்சன் என்ன மிகவும் பாதித்திருக்கிறார்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகைக்கு அமீன் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close