[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா !

director-bharathiraja-resigns-a-post-of-directors-association

ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கவே இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் விக்ரமனின் பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுக்க சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்தது தவறு என்று இயக்குனர் ஜனநாதன் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது,  “தேர்தல் முறையாக நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதுதான் சரி. முதலில், விக்ரமன் போட்டியிட்டு தலைவராகத் தேர்வானார். இரண்டாவது முறை தேர்தலே நடத்தாமல் விக்ரமனைத் தேர்வு செய்தது தவறு. அது போல இப்போது பாரதிராஜாவை தேர்வு செய்ததும் தவறானது” என்று தெரிவித்திருந்தார்.

Image result for பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கவே இயக்குனர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close