[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பிரபல மலையாள இயக்குனர் பாபு நாராயணன் மரணம்

director-babu-narayanan-is-no-more

பிரபல மலையாள இயக்குனர் பாபு நாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 59.

மலையாள சினிமாவில் 90 களில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பாபு நாராயணன். இவர், ’பொன்னாரம் தோட்டத்தே ராஜாவு’, ’வெல்கம் கொடைக்கானல்’, குடும்ப விசேஷம், ’உத்தமன்’, ’பட்டாபிஷேகம்’ உட்பட சுமார் 25 படங்களுக்கு மேல் இயக்கியவர் பாபு நாராயணன். இவர் கடைசியாக, 2013 ஆம் ஆண்டில் மம்தா மோகன்தாஸ், கனிகா, முகேஷ் நடித்த ’டு நூரா வித் லவ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். 

கடந்த சில வருடங்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது திருச்சூரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலையில் இறுதி சடங்கு நடக்கிறது.

இவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close