[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

gold-ring-gift-for-kids-birthday-on-vijay-birthday

நடிகர் விஜய் பிறந்த நாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் கடந்த 22-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். விஜய் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில விஜய் தலைமை மக்கள் இயக்கம் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜை, ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு, மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் பிறந்தநாளில் பிறந்த 13 குழந்தைகளுக்கு இன்று தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மற்றும் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close