[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

ஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு!

actor-tamannaah-bhatia-buys-flat-at-rs-80-778-per-sqft

நடிகை தமன்னா, மும்பையில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்றும் அதன் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.80,778 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த தமன்னா, அங்கு அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வசித்து வருகிறார். இவர் வடமேற்கு மும்பையில் உள்ள வெர்சோ வாவில் புதிய வீடு ஒன்றை வாங்க, பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். 

’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி ரூ.80,778. இது, வழக்கமாக அந்தப் பகுதியில் இருக்கும் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அவர் 2055 சதுர அடிக்கு 16.6 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்றும் பத்திரப் பதிவுக்கு மட்டும் 99.60 லட்சம் செலவழித்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றன. 

இந்த வீட்டில் இருந்து எந்தப் பகுதியில் பார்த்தாலும் கடல் தெரியுமாறு வீடு கட்டப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு கார் பார்க்கி ங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமன்னாவிடம் கேட்டதற்கு அவர் பதிலேதும் தெரிவிக்கவில்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close