[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

விஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் “என்றும் தல அஜித்”

endrum-thala-ajith-won-happy-birthday-thalapathy

விஜயின் பிறந்த நாளான்று 'என்றும் தல அஜித்' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

விஜய் நடிக்கும் 63ஆவது திரைப்படத்திற்கு 'பிகில்' என தலைப்பிட்டுள்ள திரைப்பட நிறுவனம், அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பது போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. 

கால்பந்து வீரரா‌க காட்சியளிக்கும் விஜய்க்கு அருகில், நடுத்தர வயதான தோற்றத்தில் வேட்டியுடன் மற்றொரு விஜய் உள்ளார். இரண்டாவது போஸ்டரில் 4 விதமான தோற்றங்களில் விஜய் காட்சியளிக்கிறார். அட்லி இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்ற‌னர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பிற்கு விஜயின் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தை பிகில் குறித்த அப்டேட்ஸ்களும், விஜய்-க்கான வாழ்த்துகளும் ஆக்கிரமித்தன. இதையடுத்து இன்று காலையிலிருந்து “ஹேப்பி பர்த்டே தளபதி” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. 

இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் 'என்றும் தல அஜித்' என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். போட்டிக்காக தொடங்கப்பட்ட இந்த ஹேஷ்டேக்கில் லட்சக்கணக்கானோர் தல அஜித் குறித்த செய்திகளை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close