[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பிரபல நடிகை மீது திடீர் தாக்குதல்: முதல்வரிடம் முறையீடு, 3 பேர் கைது!

mahie-gill-opens-up-on-fixer-set-attack-it-was-very-scary

பிரபல இந்தி நடிகை மஹி கில் மற்றும் படக்குழுவினரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய தேவ்.டி, சல்மான் கான் நடித்த தபாங், தபாங் 2, மிர்ச்சி, சஞ்சீர், புல்லட் ராஜா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை மஹி ஹில். இவர் இப்போது, ஃபிக்சர் (Fixer) என்ற வெப் சீரியலில் நடித்துவருகிறார்.  இதன் ஷூட்டிங் மும்பை காட்பண்டர் சாலையில் உள்ள பேக்டரி ஒன்றில் நடந்து வந்தது. முறையாக அனுமதி பெற்று இங்கு ஷூட்டிங் நடத்தினர். 

இந்நிலையில் அங்கு நேற்று முன் தினம் வந்த ரவுடிகள் சிலர், நடிகை மஹி கில் உள்ளிட்ட படக்குழுவினரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வீடியோவை, தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். 

அதில், குடிபோதையில் கட்டை, இரும்பு கம்பிகளுடன் வந்த 4 பேர், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தாக்கினார்கள். அவர் கள் அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடத்த முடியாது என்று தெரிவித்தனர். அவர்கள் தாக்கியதில் ஒளிப்பதிவாளருக்கு தையல் போட வேண்டி யதாகிவிட்டது. இயக்குநருக்கு தோள்பட்டை இறங்கிவிட்டது. மஹி கில்லையும் தாக்கினார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பணம் கேட்டார்கள்’’ என்று கூறியிருந்தார். வீடியோவில், நடிகை மஹி கில் கண்ணீர் விட்டு அழுதார். 

இந்நிலையில் இது குறித்து மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸை சந்தித்து படக்குழு நேற்று புகார் அளித்தது. பின்னர், மஹி கில் கூறும்போது, ‘’அவர்கள் என்னை அடிக்க வந்தார்கள். படக்குழுவினரால் காப்பாற்றப்பட்டேன். அது பயங்கர நிகழ்வாக இருந்தது. அவர்கள், எல்லோரையும் அடித்தார்கள். இதுபோன்ற சம்பவம் இனியும் நடிக்கக் கூடாது என்பதால் முதலமைச்சரை சந்திக்க வந்தோம். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கிருஷ்ண சோனார், சோனு தாஸ், சுராஜ் ஷர்மா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close