[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

“தமிழினத் தலைமையே” - விஜய்யை அரசியலுக்கு அழைத்த போஸ்டர் 

vijay-birthday-celebration-in-madurai

நடிகர் விஜயை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, மதுரை முழுவதும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்‌ளனர். 

திரைப்பட நடிகர் விஜய், நாளை மறுதினம்  22-ம் தேதி தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்பிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலதிட்ட உதவிகள் மற்றும் பொது பணிகளில் முன்னெடுத்து கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கும் தயாராகி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக மதுரை முழுவதும் விஜயின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் விஜய்-யை அரசியலுக்கு அழைத்தும், ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஜய் அரசியலுக்கு வந்து, முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்றும் சுவரொட்டிகள் வாயிலாக ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close