[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

உறுப்பினர்களை மாற்றியது ஏன்? நடிகர் விஷால் தரப்புக்கு பதிவாளர் நோட்டீஸ்!

district-registrar-has-sent-notice-to-actors-union

நடிகர் சங்கத்தின் 61 உறுப்பினர்களை, தொழில்முறை அல்லாத உறுப்பினர்கள் என மாற்றியது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டு, நடிகர் விஷால் தரப்புக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் உள்ள 61 தொழில்முறை உறுப்பினர்கள், தொழிமுறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டுள்ளனர். எதன் அடிப்படையில் அவர்கள் மாற்றப் பட்டுள்ளனர் என்று விளக்கம் கேட்டு மாவட்டப் பதிவாளார், தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இதுபற்றி நடிகர் சங்கத் தரப்பில் விசாரித்தபோது, பொதுக்குழுவில் முறையான அனுமதி வாங்கிதான் அவர்களை மாற்றியுள்ளோம் எனவும் அதையே விளக்கமாகப் பதிவாளருக்கு அனுப்ப இருக்கிறோம் என்றும் தெரிவித்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close