[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் இரங்கல் செலுத்திய பிரபலங்கள்

cinema-actors-condolence-for-crazy-mohan-death

கிரேஸி மோகன் உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கிரேஸி மோகன் உயிரிழப்பு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், “கிரேஸி மோகன் மறைந்தது சினிமா, திரையரங்கம் மற்றும் சிரிப்பவர்களுக்கு பெரும் இழப்பு. அவரைப் போல் வேறொருவர் வழ இயலாது. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ், “கிரேஸி மோகனை இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவர் ஒரு எழுத்தறிஞர். அவரை அனைவரும் பிரிந்து வாடுவோம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, “அடக் கடவுளே கிரேஸி மோகன் இறந்துவிட்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு, “கிரேஸி மோகன் இறந்த செய்தி அண்மையில் அறிந்தேன். துரதிருஷ்டவசமாக அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு மேதை சகாப்தம் ஆகிவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தி  அடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

நடிகர் பிரசன்னா, “சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் இயக்குநர் பிரசன்னாவை சந்தித்தபோது, நாங்கள் கிரேஸி மோகன் பற்றி பேசினோம். அவர் எங்களது படத்திற்கு ஆற்றிய பங்கு குறித்தும், அவரது வசனங்களின் உச்சபட்ச தாக்கம் குறித்தும் உரையாடினோம். அவரது நகைச்சுவை உணர்வு நிற்காதது. அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். உங்கள் பிரிவால் வாடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

ராதிகா சரத்துக்குமார், “உங்கள் பிரிவால் வாடுகிறோம். மிகவும் துயரமடைந்தேன்” என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் சிபிராஜ், “கிரேஸி மோகன் இறந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரது வசனத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. பெரும் இழப்பு” என்று பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, உடனே சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close