[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு

bharathiraja-elected-as-directors-association-s-president

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக, இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு இயக்குனர் விக்ரமன் தலைவராக இருந்து வருகிறார். இவரது பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தின் அடுத்த தலைவராக பாரதிராஜாவை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதால், அவர் ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற பொறுப்பு களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.  இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, கே.பாக்யராஜ், விக்ரமன், பேரரசு உட்பட ஏராளமான இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

தலைவராகத் தேர்வானது பற்றி பாரதிராஜாவிடம் கேட்டபோது, ‘’எதையாவது சாதிக்க வேண்டும் என்று இயக்குனர் சங்க தலைவராக தேர்வாகி இருக்கிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. என் சிஷ்யன் கே.பாக்யராஜ், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close