[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

அர்னால்ட் மகளை கரம் பிடித்த ’அவஞ்சர்ஸ்’ நடிகர்!

chris-pratt-shares-first-pic-with-wife-katherine-schwarzenegger

ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வாஜ்நேகரின் மகள் கேத்தரின், நடிகர் கிறிஸ் பிராட் திருமணம் நேற்று முன் தினம் நடந்தது.

ஜூராசிக் வேர்ல்ட், பாசஞ்சர்ஸ், கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி, ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம், அவஞ்சர்ஸ்:இன்பினிட்டி வார், அவஞ் சர்ஸ்: எண்ட்கேம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் கிறிஸ் பிராட். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஹாலிவுட் நடிகை அன்னா ஃபாரிசை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஜேக் என்ற மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார் பிராட்.

இதையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகர் அனால்ட் ஸ்வாஜ்நேகரின் மகள் கேத்தரினை காதலித்து வந்தார். கேத்தரின் சில புத்தகங்களை எழுதியி ருக்கிறார். ஜனவரி மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஜூன் 8 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். அதன்படி கடந்த 8 ஆம் தேதி இவர்கள் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிட்டோ நகரில் நடந்தது. இதில் அர்னால்ட் ஸ்வாஜ்நேகர், அவர் மனைவி மரியா, கிறிஸ் பிராட்டின் மகன் ஜேக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருமணம் குறித்து சமூக வலத்தளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள கிறிஸ், ‘திருமணத்துக்கு சம்மதித்ததில் மிகவும் மகிழ்ச்சி கேத்தரின்’’ என்று தெரிவித்துள்ளார். கேத்தரின், ‘’உங்களை விட்டு வேறு யாருடனும் இந்த வாழ்க்கையை வாழ விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் திருமணத்துக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close