[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பேரனுடன் ரஜினி : சந்தோஷ்சிவன் எடுத்த புகைப்படம்

rajinikanth-with-his-grandson-ved-in-shooting-spot-santhosh-sivan-take-a-photo

ரஜினி பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை கேமரா மேன் சந்தோஷ்சிவன் தனது போனில் படம் எடுத்துள்ளார்.

‘பேட்ட’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக சென்றுகொண்டிருக்கின்றன. படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து மீண்டும் இசையமைக்கிறார். தளபதி திரைப்படத்திற்குப் பின்னர் மீண்டும் இந்தப் ரஜினி படத்தில் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பேரனுடன் சூட்டிங் எடுக்கப்பட்ட திரையை கண்டுகளித்துள்ளார். அதனை சந்தோஷ்சிவன் தனது ஐ-போனில் படம் பிடித்துள்ளார். அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் அதனை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் ரஜினி ‘பேட்ட’ படம் போல தாடியுடன் இருக்கிறார். இந்துப் புகைப்படத்தில் ரஜினி தனது இளைய மகளான செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணா உடன் தான் நடித்த காட்சியை மானிட்டரில் காண்பதுபோல சந்தோஷ் சிவன் புகைப்படம் எடுத்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close