[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

தமிழ் கற்கிறார் நடிகை அமைரா தஸ்துர்

tamil-lessons-for-amyra-dastur

தீவிரமாக தமிழ்க் கற்றுவருவதாக இந்தி நடிகை அமைரா தஸ்துர் தெரிவித்துள்ளார்.

தமிழில், தனுஷ் ஜோடியாக ’அனேகன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை அமைரா தஸ்துர். இவர் இப்போது ’மென்டல் ஹே ஹை’, ’மேட் இன் சைனா’ ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், சந்தானம் ஜோடியாக ’ஓடி ஓடி உழைக்கணும்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்திக்கு இணையாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தும் அமைரா, இப்போது தமிழ் கற்று வருகிறார்.

இதுபற்றி அமைரா கூறும்போது, ’’பிரபுதேவாவுடன் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேச நினைத்துள்ளேன். அப்படி செய்தால், நடித்துள்ள கேரக்டருக்கு அது வலு சேர்க்கும். இந்த படத்தில் மிகவும் கவனமாக நடிக்கிறேன். த்ரில்லர் படத்தைப் பொறுத்தவரை எக்ஸ்பிரஷனை சரியாக பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் காட்சியில் யதார்த்தம் தெரியும். அதற்கு டப்பிங்கும் உதவும்

என்பதால் தமிழ்க் கற்று வருகிறேன். அதோடு, ‘அவங்க என்ன சொல்றாங்க?’ என்று மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதை விட, மொழி தெரிந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், தமிழை கற்கிறேன். இது என்னை நானே வளர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சி’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close