[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டி 

director-bhagyaraj-to-contest-for-nadigarsangam-s-president

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை குஷ்பு, கோவை சரளா, நடிகர் பிரசன்னா, பசுபதி, ரமணா, நந்தா, சோனியா போஸ், மனோபாலா, பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். அதன்படி செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close