[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஜப்பானிய நாவலின் தழுவலே ‘கொலைகாரன்’ - இயக்குநர் தகவல்

kolaigaran-movie-was-a-japanese-novel-based-story-director-andrew

ஜப்பானிய நாவலின் தழுவலே ‘கொலைகாரன்’ படம் எனவும், முடிவு மாறுபடும் எனவும் அப்படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘கொலைகாரன்’. இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். படம் தொடர்பாக ஏற்கெனவே பேட்டியளித்திருந்த ஆண்ட்ரூ, படத்தில் விஜய் ஆண்டனி ஒரு சைக்கோ கொலையாளி என தெரிவித்திருந்தார். அத்துடன் கொலைகள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரி அர்ஜூன் எனவும் கூறியிருந்தார்.

படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆண்ட்ரூ சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு ஒரு தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தின் தொடக்கம் ஜப்பானிய நாவலான ‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட்’ என்பதை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் படம் முடியும் நேரத்தில் நாவலிருந்து மாறுபடும் எனவும் கூறியுள்ளார். ஒரு பட இயக்குநராக இதை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close