[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ரஜினி ரசிகர்களுக்கு புது விருந்து: கபாலியின் அடுத்த டீஸர் ரீலிஸ்

kabali-second-teaser-released

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து முடித்துள்ள படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் அதிகப்படியான வியூஸ் பெற்று புது சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கபாலி படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு கிடைத்தது.

இந்நிலையில் ரஜினியின் ரசிகர்களுக்கு புதிய விருந்து படைக்கும் விதமாக கபாலி படத்தின் அடுத்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கபாலியின் முந்தைய டீஸரின் சாதனையை முறியடிக்கும் விதமாக இந்த டீஸரின் வியூஸ் யூடியூப்பில் நொடிக்கொரு முறை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

முன்னதாக ரஜினியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதனைத்தொடந்து ரஜினி மிக நலமுடன் இருப்பதாகவும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர் அடுத்த மாதம் இந்தியா திரும்ப உள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close