[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

“மிஸ்டர். லோக்கல் தோல்வி படம்தான்” - சிவகார்த்திகேயன் ஓபன்டாக் 

my-fans-are-my-strength-says-sivakarthikeyan

இனிவரும் திரைப்படங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரியாகவே இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் 'மிஸ்டர். லோக்கல்'. ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்தது. அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. வசூலிலும், விமர்சனத்திலும் தோல்வியைத் தழுவியது ‘மிஸ்டர்.லோக்கல்’.

இந்நிலையில் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா' திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய சிவகார்த்திகேயன், “மிஸ்டர். லோக்கல் திரைப்படம் தோல்வி படம்தான்” என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர் ''மிஸ்டர். லோக்கல் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா? இல்லையா? என்பதை பற்றி நான் பேசவில்லை. தொழில்ரீதியாக அனைவருக்கும் நான் லாபமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

நட்பு, துரோகம் கலந்ததுதான் என்னுடைய பயணம். தோல்வியிலும் என்னுடனே இருக்கும் என் ரசிகர்கள்தான் என் பலம். இனி வரும் திரைப்படங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரியாகவே இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close