[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இயக்குனர் அனுராக் காஷ்யப் புகார்: பாஜக தொண்டர் மீது வழக்குப் பதிவு

fir-registered-against-troll-who-threatened-to-rape-anurag-kashyap-s-daughter

இயக்குனர் அனுராக் காஷ்யப் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக மிரட்டிய, பாஜக தொண்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல இந்தி பட இயக்குனரும் தமிழில், ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப், மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். தீவிர மோடி எதிர்ப்பாளரான அவர், அதில் மோடிக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்திருந்தார்.

“உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களின் எதிர்ப்பாளனாகிய எனது மகளை, உங்களது தொண்டர்கள் வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தயவு செய்து இப்படிப்பட்ட தொண்டர்களை எப்படி கையாள் வது எனச் சொல்லி கொடுங்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் பாஜக தொண்டர் தனது மகளை மிரட்டும் தொனியில் பதிவிட்டிருந்த ஸ்கிரின் ஷாட்டையும் கூடவே இணைத்திருந்தார்.

இதை சமூக வலைத்தளத்தில் பலர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தனர். ’இதற்கு மோடி என்ன செய்வார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் அசோக் பண்டிட் உட்பட பலர் கூறியிருந்தனர். 

இதையடுத்து மும்பை அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார் அனுராக் காஷ்யப். போலீசார், மிரட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அனுராக் காஷ்யப், மும்பை போலீஸ், மகாராஷ்ட்ரா முதல்வர், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close