[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

உழைப்பாளர்களுக்கு விருந்து அளித்து கவுரவித்த நடிகர் விஜய்

thalapathy-vijay-s-auto-driver-fans-were-treated-to-a-sumptuous-lunch-and-given-gift-items

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவும் பரிசு பொருட்களும் வழங்கி கவுரவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி63’. இதன் படப்பிடிப்பு கடந்த 70 நாட்களை தாண்டி சென்னையை சுற்றி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும் கதிர், விவேக், இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படம் வரும் தீபாவளி பண்டிக்கைக்கு திரைக்கு வருகிறது. 

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு பரிசுப் பொருட்கள் மதிய உணவு விருந்து வழங்குவதை விஜய் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் விஜய் சார்பாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தினார். இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. 

இந்த பிரமாண்ட விருந்தில் நடிகர் விஜய், படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் கலந்துகொள்ளவில்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close