[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

நடிகர் சித்திக் மீது இளம் நடிகை பாலியல் புகார்!

actor-siddique-accused-of-sexual-misconduct-by-revathy-sampath

தமிழில், அர்ஜூன் நடித்த சுபாஷ், அஜீத் நடித்த ஜனா, கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன், ஆர்.கே.நடித்த வைகை எக்ஸ்பிரஸ், அரவிந்தசாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்திருப்பவர், பிரபல மலையாள நடிகர் சித்திக். இவர் மீது இளம் மலையாள நடிகையும் பிரபல மாடலுமான ரேவதி சம்பத் பரபரப்பான பாலியல் புகாரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் அவர், ‘’ கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சுகமாயிருக்கட்டே’ என்ற படத்தின் பிரிவியூ திருவனந்தபுரம் நிலா தியேட்டரில் நடந்தது. அப்போது எனக்கு 21 வயது. நடிகர் சித்திக் அங்கு என்னை சந்தித்தார். ’மஸ்கட் ஓட்டலுக்கு வரமுடியுமா, தமிழ் படத்தில் நடிப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும்?’’ என்றார். என்ன விவாதிக்க வேண்டும் என்றேன். தமிழில் தன் மகனுடன் நடிக்க வேண்டும் என்றவர், பிறகு நேரடியாகவே கேட்டார். அட்ஜஸ்ட்மெண்ட்-டுக்கு தயாராக இருக்கிறாயா? என்று. அந்த வார்த்தைக்கு வேறொரு அர்த்தம் இருப்பதை பிறகு தான் புரிந்துகொண்டேன். 

பின்னர் தனது பாலியல் தேவைகளை பற்றி விவரிக்க ஆரம்பித்தார். நான் கோபமடைந்தேன். பிறகு என்னிடம் அது நடக்காது என்று தெரிந்ததும் வெளியே போய், என்ன வேண்டுமானாலும் சொல். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றார். 

இப்படிப்பட்ட இவர், சமீபத்தில் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு எதிராகக் கருத்து தெரிவிக்கிறார். அதை கேட்டதும் என்னால் தாங்க முடிய வில்லை. இவருக்கு என்ன அருகதை இருக்கிறது பெண்கள் கூட்டமைப்பை விமர்சிக்க? அவருக்கும் என்னை போல மகள் இருக்கிறாள் என நினைக்கிறேன். அவரிடம் அந்த மகள் பாதுகாப்பாக இருப்பாளா? உங்கள் மகளுக்கு இப்படி நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள், சித்திக்? இப்படியொரு போலி முகமூடியை அணிந்து கொண்டு வெளியில் ஜென்டில்மேன் வேடம் போடுவது வெட்கமாக இல்லையா?’’ என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

கேரளாவில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை நடிகர் சித்திக் மறுத்துள்ளார். 

அதோடு முகநூலில், நடிகை ரேவதி சம்பத்துக்கு எதிராகவும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போதே ஏன் இதைச் சொல்லவில்லை என்றும் விளம்பரத்துக்காக இதுபோன்று செய்திகளை பரப்புவதாகவும் சிலர் கூறியிருந்தனர். 

இதற்கு பதிலளித்துள்ள ரேவதி, ‘’நான் நடித்த ’பட்னாகர்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் டச்ரிவர் எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததை அப்போதே வெளிப்படுத்தினேன். அதற்காக நான் சந்தித்த பிரச்னைகளை அடுத்து, இந்த விஷயத்தை உடனடியாக சொல்ல இயலாத நிலை. அதனால்தான் இப்போது தெரிவித்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close