தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை, நடிகை ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்கு நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய். இவர் தமிழில் அஜீத்துடன் ’விவேகம்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பை கிண்டலடிப்பதாகக் கூறி, ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றைப் பதிவிட்டார். அதில், நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடிகர் சல்மான்கான் உள்ள புகைப்படத்தை, கருத்துக்கணிப்பு என்றும், தம்முடன் உள்ள புகைப்படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றும், கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா ராய் உள்ள புகைப்படத்தை, தேர்தல் முடிவு என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
விவேக் ஓபராய் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்தி திரைப்பட நடிகர், நடிகைகளும் இதற்கு கண்ட னம் தெரிவித்திருந்தனர். ’’நான் தவறு ஒன்றும் செய்யவில்லை, ஏற்கனவே யாரோ ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே கருத்து தெரிவித்தேன்’’ என்று விளக்கம் அளித்திருந்தார் விவேக் ஓபராய். இந்நிலையில், இந்த பதிவு சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுப் படுத்துவது போன்றது என கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி விவேக் ஓபராய்க்கு நோட்டீ ஸ் அனுப்பியது.
எதிர்ப்பு அதிகரித்ததை அடுத்து, நடிகர் விவேக் ஓபராய் இன்று மன்னிப்புக் கேட்டுவிட்டு அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். ’’ஒரு விஷயத்தை முதலில் பார்க்கும்போது சில நேரங்களில் வேடிக்கையாகத் தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அது அப்படி தெரியாது. கடந்த 10 வருடங்களாக சமூகத்தில் பின் தங்கிய 2000 குழந்தைகளுக்கு உதவி வந்திருக்கிறேன்.
Sometimes what appears to be funny and harmless at first glance to one, may not be so to others. I have spent the last 10 years empowering more than 2000 underprivileged girls, I cant even think of being disrespectful to any woman ever.
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 21, 2019
எந்த பெண்ணையும் எப்போதும் இழிவாக நினைத்தது கூட இல்லை. நான் பதிவிட்ட மீம் காரணமாக யாராவது ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந் தால் கூட அதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்