[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்?” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்

cricket-player-raina-question-to-actor-surya

உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைபடம் ‘என்ஜிகே’. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கும், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘என்ஜிகே’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. 

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சூர்யா ட்விட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ரசிகர்கள் கேள்விக்கு நடிகர் சூர்யா நேரலையில் பதிலளித்து வருகிறார். 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என சூர்யாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த சூர்யா மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பதிலில் “ஹாய் மாப்ளே...” என்று ஆரம்பித்தார். மேலும் “நான் எப்போதும் ரெய்னாவை மாப்ளே என்று தான் கூப்பிடுவேன். எனக்காக இந்த நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. என்னால் நம்பவே முடியவில்லை.

நான் யாரையும் வேறுபடுத்து பார்ப்பதிவில்லை. ஆனால் நான் ஒருவரை சொல்ல வேண்டும் என்றால், அதை நீங்கள்கூட ஏற்றுக்கொள்வீர்கள். அவர் மகேந்திர சிங் தோனி. ஆமாம் எனக்குப் பிடித்த வீரர் அவர். கடந்த சிஎஸ்கே போட்டியை மிகவும் ரசித்து பார்த்தேன். நான் எப்போதும் சிஎஸ்கே ரசிகர்தான்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close