[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

படப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்

daniel-craig-suffers-another-injury-while-filming-james-bond

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக், காயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

பாண்ட் பட வரிசையின் 25 வது படம், இப்போது தயாராகி வருகிறது. கேரி ஜோஜி புகுனகா இயக்கும் இந்தப் படத்தில் ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனி யல் கிரேக்குடன் ரால்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஜமைக் காவில் நடந்து வந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

வில்லனை ஓடிச் சென்று பிடிப்பது போன்ற காட்சியில், டேனியல் கோட் சூட்டுடன் ஓடினார். அப்போது தடுமாறி விழுந்ததில் அவர் கணுக்காலி ல் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, படப் பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘’இது பெரிய காயமில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்’’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை, அடுத்த வருடம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close