[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“என் படத்தை லவுட்டி என்னையே நடிக்க வைத்தது என்ன ஒரு‘அயோக்கியா’த்தனம்” - பார்த்திபன்  

parthiban-criticize-ayokya-movie

பல இடையூறுகளுக்கு பிறகு வெளியான அயோக்யா திரைப்படம் குறித்து அந்த படத்தில் நடித்த பார்த்திபன் விமர்சனம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதற்காக முதல் காட்சியை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ‘அயோக்யா’ படம் வெளியாவது தள்ளி போடப்பட்டுள்ளதாக பி.ஆர்.ஓ ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளிவிடப்படுவது அயோக்கியத்தனம் எனத் தெரிவித்திருந்தார். இதனால் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுக்கு உண்டான மன உளைச்சலுக்கு அளவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்த பார்த்திபன், வெல்வர் விரைவில் என்றும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தடைகளை தாண்டி நேற்று இப்படம் வெற்றிகரமாக வெளியானது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று மற்றொரு ட்விட் செய்துள்ளார். அதில், “'அயோக்கியா'த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்தது என்ன ஒரு'அ-தனம்'? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் உள்ளே வெளியே. இப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. இதில், பார்த்தீபன், ஐஸ்வர்யா, செண்பகம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சீதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close