[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

விஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளியிட இடைக்காலத் தடை

interim-ban-for-vijay-sethupathi-and-dhanush-movie

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் ‘சிந்துபாத்’ திரைப்படமும், தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த இரு திரைப்படங்களையும் கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். இவர் ஏற்கனெவே ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டவர்.

அப்போது 17 கோடி ரூபாய் பணத்தை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ‘சிந்துபாத்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு தடை கோரி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதரபாத் நீதிமன்றத்தை நாடியது. அப்போது இரு படங்களையும் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close