[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

இந்தியாவில் ரூ.300 கோடி; உலகளவில் ரூ.13ஆயிரம் கோடி: வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

avengers-endgame-crosses-2-billion-dollar-mark

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இதுவரை உலக அளவில் 13ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது

இந்தியாவில் வெளிவந்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்த திரைப்படம் என்றால் அது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீம்ஸ்களில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெரும் முக்கியத்துவத்தை பெற்ற படமாக ட்ரெண்ட் ஆனாதால், அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டர்களில் கூட்டம் கூடியது. 

இது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் குடும்பாக செல்லும் அனைவரும் இந்தப் படத்திற்கு சென்றுவிட்டனர். எனவே படத்தின் வசூல் வேகமாக உயர்ந்துவிட்டது. இதனால் உலக அளவில் இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.13ஆயிரம் கோடிகளை அள்ளிவிட்டது. மேலும் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது.  இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் சுமார் ரூ.2500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது எனக் கூறப்படும் நிலையில் தற்போது அதனை விட பல மடங்கு அதிகமாக வசூலை ஈட்டி மேலும் முன்னேறி செல்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close