[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

பிரபல பாடகி எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை

singer-janaki-discharged-from-hospital-after-surgery

இடுப்பு எலும்பு முறிந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். இவர் மைசூருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக  கால் தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவரை மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி, ’’கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக் கிறேன். வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நலம்பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close