[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

அடுத்த கட்டப்பா சிபிராஜ்

now-a-kattappa-in-sibiraj-s-next

தனது தந்தையை தொடர்ந்து நடிகர் சிபிராஜ் கட்டப்பா வேடத்தில் நடிக்க உள்ளாரம்.

பிரபாஸ், ராணா, சத்தியராஜ், அனுஷ்கா, தமன்னா ஆகியோரது நடிப்பில் ராஜமெளலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பாகுபலி படம் செம ஹிட்டானது. இதில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் நடிப்பு அனைவராலும் அதிகம் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தனது தந்தைக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிபிராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிபிராஜ் நடிப்பில் ‘ஜாக்சன் துரை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சிபிராஜ், ‘கட்டப்பாவை காணோம்’ என்ற புதுபடத்தில் நடிக்க உள்ளாராம். இதில் கட்டப்பாவாக சிபிராஜ் நடிக்கவுள்ளார்.முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இந்த படத்தை மணி என்பவர் இயக்கவுள்ளார்.

சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ படம் தெலுங்கில் ‘கட்டப்ப ராஜூ’ என்ற பெயரில்தான் வெளியாகவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close