[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு

நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: நாசர்

actors-union-election-date-will-be-announced-soon-nasar

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூறும்போது, நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, ‘’இது மாதாமாதம் நடக்கும் செயற்குழுதான். அவசர கூட்டமில்லை. நாங்கள் பதவிக்கு வந்த போது அறிவித்தவற்றை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி விட்டோம். கட்டிடமும் முடியும் தருவாயில் இருக்கிறது.நாங்கள் பொறுப்புக்கு வரும்போது குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்றுதான் முதல் நாளில் இருந்தே வேலையை தொடங்கினோம். சட்டப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கால தாமதத்தால் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.

அதற்கான வேலைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்பார்வையில் அது தொடர்ந்து நடக்கும். நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேலைகள் நாளை முதல் தொடங்குகிறது. தேர்தலில் நாங்கள் கண்டிப்பாகப் போட்டியிடுவோம். விஷால் போட்டியிடுவாரா என்பது  பற்றி இப்போது சொல்ல முடியாது’’ என்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close